கடலூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை

 

கடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சுதன் குமார் காராமணி குப்பம் வந்த நிலையில் இன்று காலையில் அவருடைய வீட்டில் இருந்து புகை நாற்றம் வந்துள்ளது.

உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது சுதன் குமார், அவருடைய தாயார் மற்றும் மகன் நிஷாந்த் குமார் மூவரும் மூன்று அறைகளில் எறிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் வீடு முழுவதும் ரத்த கரையும் இருந்துள்ளது. இதனால் யாரோ மூன்று பேரையும் கொலை செய்து விட்டு அவர்களை எரித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments