• Breaking News

    35 வருடங்களாக போராடி வருகிறேன்..... தமிழ்நாட்டு மக்கள் என் பின்னால் வரவில்லை..... ராமதாஸ் வேதனை

     

    35 வருடங்களாக போராடி வருகிறேன் ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் என் பின்னால் வருவதற்கு தயங்குகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்ற கொள்கைகளின் அடிப்படையில் 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு நான் போராடி வருகிறேன்.

    ஆனாலும் ஏனோ தெரியவில்லை. மக்கள் என் பின்னால் வர மறுக்கிறார்கள் தயங்குகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாமக பின்னால் வரும் போது தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    No comments