• Breaking News

    தம்பதிகளில் ஒருவர் தலித் சமூகமாக இருந்தால் ரூ.2.50 லட்சம்..... மத்திய அரசு அறிவிப்பு

     

    இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் தொழில் தொடங்குவதற்கும் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை திருமண திட்டத்தின் மூலமாக புதுமண தம்பதிகளுக்கு மத்திய அரசு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இலவசமாக வழங்குகின்றது. ஆனால் இதற்கு சிறப்பு நிபதனைகள் உள்ளன. அதாவது தம்பதிகளில் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். 

    இதில் தகுதியான தம்பதிகள் இருவரின் பெயரிலும் முதலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் டிடியாக பெறுவார்கள். மீதமுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments