காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 28ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவும், 24ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்திக்கடனை செலுத்தியதோடு அலகு குத்தி டிராக்டர் மற்றும் ஆட்டோ இழுத்தனர். இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி இருந்து ஐந்தாயிரதிற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு தேவி கருமாரியம்மனை வழிபட்டு சென்றனர்.
கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகத்தின் சார்பாக வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. கோயிலுக்கு வந்த அனைவருக்கும் விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
0 Comments