தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் ரூ.51,080 ஆகவும், கிராமுக்கு 30 ரூபாய் வரை குறைந்து ஒரு கிராம் 6385 ரூபாயாகவும் இருக்கிறது.மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 89 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் வரை குறைந்து 89,000 ரூபாயாகவும் இருக்கிறது.
No comments