• Breaking News

    ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி

     


    இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக போருக்குப்பின் பிரதமர் மோடி அங்கு செல்ல இருக்கிறார். சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்ற பிரதமர் மோடி அதிபர் புதினை சந்தித்து பேசினார்.இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார். அதோடு அமெரிக்காவும் பிரதமர் மோடியின் பயணம் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி உக்ரைன் செல்ல இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச இருக்கிறார்.

    No comments