வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின் என்னுடைய அம்மா 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இதை நான் தட்டிக் கேட்டதால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.அதோடு என் பாட்டி வீட்டிலும் என்னை சேர்க்கவில்லை. என்னுடைய அப்பா சேர்ந்து வாழ தயாராக இருக்கும்போதிலும் என்னுடைய அம்மா வர மறுக்கிறார். இதனால் நானும் என்னுடைய அப்பாவும் ஆதரவின்றி தவித்து நிற்கிறோம்.
எனவே என்னுடைய தாயை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் மனு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments