2 பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்..... முழு விவரம்....
இந்தியாவைப் பொறுத்த வரையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இன்னும் பல இடங்களில் பான் கார்டு தேவைப்படுகிறது. வங்கிகளில் கேஒய்சி ஆவணமாகவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிக அளவிலான பண பரிவர்த்தனை நடைபெறும் போதும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொருவரும் பான் கார்டு வைத்திருப்பது அவசியமாகும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு சில நேரங்களில் தொலைந்து விட்டால் புதிதாக அப்ளை செய்து அதனை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் பழைய பான் கார்டு கிடைத்தால் அதனையும் வைத்துக் கொள்வார்கள். மேலும் சிலர் பான் கார்டு விண்ணப்பித்து நீண்ட நாள் ஆகிவிட்டது என கூறி மீண்டும் அப்ளை செய்வார்கள். இது போன்ற நேரங்களில் இரண்டு பான் கார்டும் கிடைத்து விடும். அவ்வாறு ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால் வருமான வரித்துறை விதிகளின்படி அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
No comments