• Breaking News

    மண்ணிவாக்கம் ஊராட்சியில் ₹.18 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்


    மண்ணிவாக்கம் ஊராட்சியில் ₹.18 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ இன்று காலை அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சியில், மண்ணிவாக்கம், மண்ணிவாக்கம் விரிவு, அண்ணா நகர், அம்பேத்கர் நகர், சுவாமி விவேகானந்த நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஊராட்சி உட்பட்ட சண்முகா நகர் பகுதி இரண்டில் உள்ள பிரதான சாலைக்கு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து .18 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் க.கெஜலட்சுமிசண்முகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுமதிலோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், ஆப்பூர் சந்தானம், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ராமபக்தன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சண்முகா நகர் பிரதான சாலைக்கு பூமி பூஜை போட்டு அடிகள் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். 

    இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ் கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினர் அமுதாரங்காநாதன், பூவழகிநித்திய செல்வராஜ், உஷா பிரபு, பூசாதேவி புன்னியகோட்டி, சுரேஷ், லட்சுமி நாகராஜ் குமார், பத்மாதெய்வசிகாமணி மல்லிகாபார்த்திபன், சேகர், பச்சையம்மாள்அண்ணாதுரை, பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    No comments