இன்றைய ராசிபலன் 17-07-2024
மேஷம் ராசிபலன்
ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துங்கள். உங்கள் பணியில் நிலையான முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் கடின உழைப்பு விரைவில் பாராட்டப்படும். உங்கள் மேல் அதிக நம்பிக்கை வையுங்கள். உங்கள் திறன்கள் மீது நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், வாழ்க்கையின் சிக்கல்களைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும். எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்திற்காகவும் உங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். வெளிக்காட்ட உங்களிடம் நிறையத் திறமைகள் உள்ளன். எனவே புதிய எல்லைகளை நோக்கி பணியாற்றுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
உண்மையில் இன்று நீங்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளீர்கள், இதில் கவனம் செலுத்தாமல், அமைதியாக விஷயங்களைச் செய்யத் தேர்வு செய்யுங்கள். இறுதி முடிவு உங்களைப் பற்றிப் பேசட்டும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறைக்க வேண்டாம். இதனால் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். உங்களால் பயன்பெற சில நபர்கள் வெளியே காத்திருக்கின்றனர். எப்போதும் அந்த நபர்களைத் தேடுங்கள்.
மிதுனம் ராசிபலன்
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டியிடுகிறீர்கள். நீண்ட காலத்திற்குப் பின்னர், உங்களுக்கு மிகவும் சிறந்த நபரிடம் இருந்து இதை நீங்கள் கேட்கலாம். அவர்களிடம் பெரிய இடைவெளியைப் பற்றிக் கேள்விப்படுவது, பொறாமையைத் தூண்டக்கூடாது. அவர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள். நீங்கள் எங்குத் தொடங்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு செயலை எடுத்து புத்திசாலித்தனமாக வேலை செய்ய உத்வேகம் பெறுங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று, நீங்கள் சலிப்படைந்தது போன்று உணர்கிறீர்களா? உங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து வருகிறீர்கள். இதை யோசிக்க இப்போதே சிறந்த நேரமாக இருக்கும். மற்றவர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை பயன்படுத்துவது உங்களுக்கு போதுமானதாக இருக்காது. உங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆழமாக யோசித்து, உங்களுக்கான யோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது என்னால் முடியாது என்று சாக்குபோக்கு சொல்வது உங்களுக்கு எப்போதும் உதவாது. ஆகையால், இன்று உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம். எனவே, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
சிம்மம் ராசிபலன்
உங்கள் படைப்பு ஆற்றல் பெரியளவில் வெளிப்படும். மேலும், உங்கள் படைப்பாற்றல் இன்று மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும். நீங்கள் முக்கியமானகாரியங்களைச்செய்வதில் திறமையானவராக இருப்பீர்கள். முழுமையாக உங்கள்திறமையாகச்செயல்படுத்தப்பலவிஷயங்களைக்கூர்ந்து கவனியுங்கள். செய்ததவற்றுக்காகமற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஆணவம்காரணமாக மன்னிப்புகேட்காமலிருந்துவிட வேண்டாம். இது நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். அன்பான வார்த்தைகளைப் பேசுவது நிச்சயமாக இன்று உங்களுக்கு உதவும்.அன்பாகப்பேசுவது, இந்த நாளில் நன்மைகளை உண்டாக்கும்.
கன்னி ராசிபலன்
உங்களை யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் சிந்தனையற்ற செயல்கள் இன்று வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன. வெளிப்படையான, பாதுகாப்பான விஷயங்கள் இப்போது உங்களுக்குத் தெரியும். சுத்தமானகாற்றைச்சுவாசியுங்கள். மேலும், சுத்தமாக வாழுங்கள். நிச்சயமாக அது எளிதாக இருக்காது. ஆனால், இறுதியில் இது உங்களுக்கு சில நல்ல பெயரையும், நல்லெண்ணத்தையும் கொடுக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காக ஒருபோதும் வருத்தப்பட வேண்டாம்.
துலாம் ராசிபலன்
நிலையற்ற தன்மை மற்றும் தோல்விக்கான வாய்ப்புகளைப் பற்றி பேசியே, உங்கள் மனதை இறுக்கமாக மூடிவிடாதீர்கள். அதற்கு பதிலாக, நேர்மறையான விஷயங்களைப் பேச தேர்வுசெய்யுங்கள். இது நிறைவையும், நம்பிக்கையையும், மறுசீரமைப்பையையும் கொடுக்கும். நீங்கள் நினைப்பதை விட, அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். முதலில், நீங்கள் இதை நம்ப வேண்டும். உங்களது தொண்டுள்ளமும், தாராளமனப்பாங்கும் மற்றவர்கள் மத்தியில் உங்களை விரும்பத் தகுந்தவர்களாக மாற்றுகின்றன. சிலபேரது உலகம் நீங்கள் தான். இருப்பினும், அவர்களின் பாசத்தையோ, அன்பையோ நீங்கள் உணரவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் அன்பைக் காட்டி, அவர்களுக்கு உண்மையிலேயே கொடுக்க வேண்டிய கவனிப்பை கொடுக்கும் நேரம் இதுவாகும்.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மேலும், இன்று உங்களுடைய பதட்டத்தின் நிலை எல்லை மீறிய அளவில் உள்ளது. உங்களது கடினமான வேலைப்பளுவிற்கு மத்தியில், நேரத்தைக் கண்டறிந்து உங்களை சற்று தளர்த்தி, ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை விட இது சற்று அதிகம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில், விஷயங்களை செய்துமுடிக்க உதவக்கூடிய ஒரு நலம்விரும்பி அல்லது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரது உதவியை நாடுங்கள். உங்கள் பயபக்தியும், விடாமுயற்சியும் நீண்ட காலத்திற்கு தாராளமான ஊதியமாக மாறும்.
தனுசு ராசிபலன்
பணிவுடன் இருப்பது எல்லா நேரங்களிலும் உங்களுக்கு உதவாது. இது போன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் போது, உங்களை விரும்பாதவர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்தது போலப் பேசி, அவர்களது ஒத்துழைப்பைப் பெறலாம். வேலை விஷயங்களில் இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் யோசனைகள் விரைவில் அங்கீகரிக்கப்படும்! உங்கள் வாழ்க்கையில் உள்ள சில கெட்ட பழக்கங்களை நீங்கள் உண்மையில் நிறுத்தி விட விரும்புகிறீர்கள். அவற்றை நிறுத்தி விடுவது என்பது நீங்கள் நினைப்பதை விடக் கடினமாக இருக்கலாம். அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
மகரம் ராசிபலன்
நீங்கள் மிகவும் சிறந்தவர், எனவே உங்களைப் பற்றிக் கவலைப்பட்டு மனம் தளர வேண்டாம். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் தைரியமானவர், புத்திசாலி, திறமையானவர். நேர்மறை சொற்களைப் பேசுங்கள் மற்றும் உங்கள் முகத்தைப் புன்னகையுடன் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்கள் குறிக்கோள்கள் சற்று தெளிவில்லாமல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்மறை எண்ணங்களைப் போக்கத் தியானத்தில் ஈடுபடுங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்கள் தகவல்தொடர்புகள் இன்று சற்று சிரமத்தை உண்டாக்கலாம். உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், உங்கள் பேச்சுகளில் உள்ள நேர்மையற்ற தன்மையை உணர்ந்து கொள்ளலாம். அவர்களைச் சரியான வழியில் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு நிச்சயமாக உங்களுக்கு உதவும். உங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதால், சில நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அல்லது உங்களுடன் தொடர்புடைய ஒருவருக்கும் இன்று உங்கள் உதவி தேவைப்படும்.
மீனம் ராசிபலன்
சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் சரியான தருணம் இதுவாகும். தைரியமாக இருங்கள். மேலும், தீர்வுகளைக் கண்டறிய முயலுங்கள். இது உங்களுக்கு ஏன் நேர்ந்தது என அங்கலாய்த்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை! எனவே, இன்று முதல், சரியான அளவில் உடற்பயிற்சி செய்து, ஆரோக்யமான உணவை உட்கொள்ளுங்கள். அச்சமின்றி இருங்கள். உங்களது முதுகுக்குப் பின்னால், புறம்கூறுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படாதிருங்கள். விமர்சனங்களை எளிதான மனதுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
No comments