சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு செல்வதற்காக ஏராளமான பயணிகள் நாள்தோறும் வரும் நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.
அதோடு அவர் வைத்திருந்த இரண்டு அட்டை பெட்டிகள் அசைந்தது.இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்த போது அதில் 160 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்தது. இந்த தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சுங்க அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் இவைகள் ஆந்திர மாநிலம் சதுப்பு நில பகுதியில் கிடைப்பதாகவும் அங்கு அதன் விலை ரூ 50 முதல் ரூ.100 எனவும் ஆனால் மலேசிய நாட்டில் 5000 ரூபாய் வரை விற்பனையாகும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து மலேசியாவில் இந்த நட்சத்திர ஆமைகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன என்றும் உணவகங்களில் இறைச்சி மற்றும் சூப்புகாக பயன்படுத்துகின்றனர் என்றும் இதில் மருத்துவ குணம் அதிகம் என்பதால் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.மேலும் இதனை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
No comments