பழவேற்காட்டில் சுமார் 1500 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட மெகா முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. சுமார் 1500 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 1970 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆறு மாத காலமாக அலுமனி குழு துவக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் மூலம் நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளுடன் 60 ஆண்டுகால மூத்த ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் வரவேற்று கௌரவித்தனர்.1968 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 75 வயது இரண்டு முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் ஆசிரியர்கள்,60 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த முன்னாள் மாணவ,மாணவிகளுக்கும், பழவேற்காடு பகுதியில் உள்ள 32 கிராம நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.இதனை பள்ளிக் கல்வி துறை இயக்குனர் ஓய்வு பெற்ற அறிவொளி வழங்கினார்.
கல்வி துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு அரசியல் கலப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களே நிகழ்ச்சியை நடத்தினர்.ஒவ்வொரு ஆண்டு பள்ளி படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.தாங்கள் அமர்ந்து படித்த இருக்கைகளில் அமர்ந்து நினைவை பகிர்ந்து கொண்டனர்.
No comments