விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவ டியூசன் ஆசிரியை (வயது 22) ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர். தற்போது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்துள்ளான்.
இந்த நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் சில முறை எல்லை மீறியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர், மாணவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளனர். ஆனாலும் டியூசன் ஆசிரியை, மாணவன் தகாத உறவு தொடர்ந்துள்ளது.மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவனது பெற்றோர், சிறுவனை 181 மையத்தில் ஆஜர்படுத்தி கவுன்சிலிங் கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டியூசன் ஆசிரியை கைது செய்தனர்.
0 Comments