தேனி: இந்து கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.... சாலைமறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது
இந்து கோயில்களில் ஆலய கட்டணத்தை ரத்து செய்யகோரியும்,இந்து கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பல கட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கூடலூர் நகரில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்து முன்னணி நகரத் தலைவர் ஜெகன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கூடலூர் காவல்துறையினர் அவர்களை தடுத்தனர்.காவல்துறையினரை வீரியம் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இதையடுத்து அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கூடலூர் காவல்துறையினர் குண்டு கைது செய்து கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட இந்து முன்னணி செயலாளர்கள் பாலமுருகன் ஜீ, சுந்தர் ஜீ, மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி இயக்க தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
No comments