பெருங்களத்தூரில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் பெருங்களத்தூர்- பீர்க்கன் காரண அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மாரியதை செலுத்த வந்த பள்ளி, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்ற ஏற்பாட்டில் அதன் தலைவர் பாலமுருகன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சினிவாசன், தாம்பரம் மாமன்ற உறுப்பினர் ஹேமாவதி சங்கர், பெருங்களத்தூர்- பீர்க்கன் காரணை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சுப்புராமன் ஆகியோர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந் நிகழ்ச்சியில் பீர்க்கான்காரணை- பெருங்களத்தூர் வியாபாரி சங்க நிர்வாகிகள் பார்த்தீபன், சிதம்பரநாதன், தினேஷ், மற்றும் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் டி.ராஜா, நவநீதகிருஷ்ணன், சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் கூறுகையில், பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
No comments