திருமணமானவருடன் ஒரு தலை காதல்..... பெண்ணின் செயலால் பறிபோன ரூ.10 லட்சம்.....
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன்பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி (29) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு ராகவி தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33) என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ராகவி ஒருதலையாக காதலித்து வந்தார். இதில் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதால் அவர் ராகவியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ஆறுமுகம் மற்றும் கார்த்திக் ஆகியோர்களிடம் ராகவி கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். அதற்கு ராகவி ரூ.10 லட்சம் வரை தருவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ நாளில் பேருந்து நிறுத்தத்தில் ராகவி பணத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் உட்பட 3 பேரும் காரில் வந்தனர். அவர்கள் ராகவியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அதன் பிறகு ஒரு இடத்தில் கார் நின்ற நிலையில் முதலில் பணத்தை தருமாறு அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் ராகவி பாலமுருகனை என்னுடன் சேர்த்து வையுங்கள் அதன் பிறகு பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்குள் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் இது தொடர்பாக ராகவி கவுண்டன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments