அரியலூர்: மருமகள் நடத்தையில் சந்தேகம்.... 1 வயது குழந்தையை கொன்ற மாமியார்.....

 

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா தன்னுடைய குழந்தைகளை வீட்டின் முன்பு விட்டு விட்டு அருகே உள்ள பால் பண்ணைக்கு பால் ஊற்ற சென்றுள்ளார். பிறகு வீடு திரும்பிய போது கிருத்திகா சுயநினைவு இல்லாமல் வாயில் மண்ணுடன் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய மகளை மீட்டை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சந்தியா போலீசில் புகார் அளித்த நிலையில் போலீஸ் நடத்திய விசாரணையில், சந்தியாவின் மாமியார் விரதம்மாள் குழந்தையின் வாயில் மண்ணை திணித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், கிருத்திகா என்னுடைய மகனுக்கு பிறக்கவில்லை என்று சந்தியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தேன். சம்பவத்தன்று என்னுடைய பேரன் மோனிஷ் மீது கிருத்திகா மண்ணை அள்ளிப்போட்டு விளையாடிக் கொண்டு இருந்தாள். இதில் ஆத்திரமடைந்த நான் கிருத்திகா வாயில் மண்ணை திணித்தேன். அதில் மயங்கி விழுந்து அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments