கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் 18 கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 1 கோடியை 70 லட்சம் மதிப்பில எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் நிகழ்வில் பங்கேற்ற மாணவர் மாணவியருக்கு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது மாவட்டஊராட்சி குழு தலைவர் கே வி ஜி உமா மகேஸ்வரி வேணு சேர்மன்கே எம் எஸ். சிவகுமார் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம்.. கவுன்சிலர் இந்திரா திருமலை தலைமையாசிரிய ஐயப்பன் தலைமை துணை ஆசிரியர் புவனேஸ்வரி. மெய்யழகன் ஜெயச்சந்திரன் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஒப்பந்தக்காரர் கெஜா முதலியார் ஆசிரியர் பெருமக்கள். உள்ளிட்டகழக நிர்வாகிகள் மாணவர்கள்.என பலர் கலந்து கொண்டனர்.
No comments