திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மோகன் குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் மோகன் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மோகன் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த புகாரில் பேரில் வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments