• Breaking News

    காளையார் கோவில் அருகே ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டவருக்கு காது சிதறியது


    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள  மாத்துக்கண்மாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55 )இவர் வீட்டில் படுத்து இருக்கும் பொழுது ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார்  திடீரென்று காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் ஹெட் வெடித்ததாக கூறப்படுகிறது.

      உடனே அவரை சிகிச்சைக்காக 108 வாகனம் மூலம்  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தூங்கும் பொழுது ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டதால் காது சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    No comments