தேனி: பணி நிறைவு விழாவில் 'சிட்டு' என்ற நூலை வெளியிட்ட ஆசிரியர்
தேனி மாவட்டம் சின்னமனூரில் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியை பள்ளி மாணவர்களின் வாழ்க்கை குறிப்பினை புத்தகமாக வெளியிட்டு ஓய்வு பெற்ற சம்பவம் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியை உமாராணி இவர் தேவாரத்தில் உள்ள வள்ளுவன் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
தற்பொழுது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் நிலையில் ஆசிரியை உமாராணி பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் குழந்தை பருவத்தில் உள்ள மன நிலைகளை அறிந்து அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கும் பாடங்களை எப்படி கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் கல்வியை எளிமையாக அடைவார்கள் என்பது குறித்து தனது இடைநிலை ஆசிரியர் பணி அனுபவத்தின் வாயிலாக சிட்டு என்னும் நாவல் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அவரது இடைநிலை ஆசிரியர் பணி காலத்தில் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படும் வித்தியாசமான அனுபவங்களை எப்படி கையாள்வது என்பது குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கம் எளிமையான விளக்கம் தரும் புத்தமாக அவர் எழுதியிருப்பது ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இடைநிலை ஆசிரியராக தனது பணியை தொடங்கி சிறப்பாக செயல்பட்டு ஓய்வு பெறும் ஆசிரியை புத்தகத்தினை வெளியிட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது சமூக ஆர்வலர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments