வாசன் ஐ கேர் சார்பில் அம்பத்தூரில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி
சென்னை அம்பத்தூரில் வாசன் ஐ கேர், ஏ.எஸ். ஜி. மருத்துவமனை மற்றும் கும்முடிபூண்டி வினா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து உலக யோகா தினத்தை முன்னிட்டு 700 மாணவர்கள் பங்கேற்கும் யோகா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்ந யோகாசன திருவிழாவில் 500 மாணவர்கள் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தனர். அப்போது 2500 ஆணிகள் பொருத்தப்பட்ட ஆணி பலகை மீதும் பல வண்ண மண்பானைகள் மீதும் பல வித யோகாக்களை செய்து அனுப்பியது நிகழ்வை காண வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் எம்.எல்.ஏ.வுமான ஜோசப் சாமுவேல் மற்றும் சென்னை மெடிக்கல் டைரக்டர் டாக்டர் பிபி கௌஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் உலக யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் மாண வர்களின் கிளாசிக் டான்ஸ், நெயில் பேட் யோகா, யோகா டான்ஸ், கிளாசிக்கல் டான்ஸ், செமி கிளாசிக்கல் டான்ஸ், வாசன் ஐ யோகா உள்ளிட்ட பல்வேறு யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments