தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம் தொடக்கம்..... பாஜக சார்பில் பயணிகளுக்கு இனிப்பு, பூ கொடுத்து உற்சாக வரவேற்பு
வார இறுதி நாட்களில் சென்னையில் பணியாற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது கடும் கூட்டு நேரில் ஏற்படுகிறது கூட்டு நெரிசலை கணக்கில் கொண்டு கூடுதலாக சிறப்பு ரயில்களை வார இறுதி நாட்கள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு
இன்று முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06051) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும். அதன்படி தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு பறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து இன்று புறப்படு சென்ற ராமநாதபுரம் ரயிலில் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.சிறப்பு ரெயிலை தினந்தொறும் ரெயிலாக மாற்ற வேண்டும் என பேராவூரணி ரெயில் பயனிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளர்.
மேலும் புதிய ரெயில் தொடக்கத்தை முன்னிட்டு பாஜக சார்பில் மாநில செயலாளர் விவின் பாஸ்கரன் கலந்து கொண்டு பயணிகளுக்கு இனிப்பு, பிஸ்கெட் மற்றும் ரோஜா மலர் வழங்கி பயணிகளை உற்சாக படுத்தினர்மேலும் பிரதமருக்கும், ரெயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
No comments