பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம் பொதுமக்கள் குறைகள் தீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறையின் 1433-ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது.இதில் சோழவரம் உள்வட்டத்திற்குட்பட்ட நல்லூர்,ஜெகநாதபுரம்-12-3,ஆத்தூர்,புதிய எருமை வெட்டிபாளையம்,பழைய எருமை வெட்டிபாளையம், காரனோடை,சோத்துப் பெரும்பேடு, ஆட்டந் தாங்கல்,விஜயநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.
இதனை பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந்த் மனுக்களை பெற்று உடனடி விசாரணை நடத்தினார்.அவருடன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன்,சார் ஆட்சியரின் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனன் சோழவரம் ஒன்றியம் துணை சேர்மன் கருணாகரன் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, வட்ட வழங்கல் அலுவலர் சம்பத்,தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி,முதல் நிலை வருவாய் ஆய்வாளர் அன்புச்செல்வன்,ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம் உள்ளிட்டோர் இருந்தனர்.
No comments