விழுப்புரம்: தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை

 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015-17ம் ஆண்டுகளில், தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர்களுக்கு வழங்கப்பட்ட விபத்து இழப்பீடு, இயற்கை மரணம், திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு, கையாடல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் சென்றன. இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் இந்த புகார்கள் தொடர்பாக, விழுப்புரம் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக உள்ள சுந்தர்ராஜனுக்கு சொந்தமாக விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் உள்ள ஒரு வீடு, விழுப்புரத்தில் உள்ள மற்றொரு வீடு ஆகிய இரண்டு இடங்களில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.இதேபோல், செல்வாரஜ் நகர் பகுதியில் வசிக்கும், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணியாற்றிய தேவிகா என்பவரது வீடு, இடைத்தரகர் முருகன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments