இலங்கைஅகதிகளுக்கு தமிழகத்தில் இலவச கல்வி வழங்குவதை பாராட்டுகின்றோம் - இலங்கை அமைச்சர் சதாசிவம்வியாழேந்திரன் பேச்சு
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழம் மற்றும் மலேசியாவில் உள்ள இண்டி பல்கலைகழகம் இணைந்து எம்.பி.ஏ. படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தனது.அதன் படி ஒரு ஆண்டு சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்திலும், ஒரு ஆண்டு மலேசியா கோலாம்பூரில் உள்ள இண்டி பல்கலைகத்திலும் எம்.பி.ஏ. பட்டம் கற்று கொடுக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு இலவச கல்வி ஆணையை இலங்கை அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ் ஆகியீர் வழங்கினர்.அதேபோல் திருநங்கைகள் 6 பேருக்கு இலவச முதுகலை படிப்பிற்கான சேர்க்கை ஆணையை வேல்ஸ் பல்கலைகழக துணை தலைவர் பிரீத்தா கணேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ்நாடு எங்களது தாய் வீடாகும். தமிழகத்திற்கு வரும் தாய் வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி எப்போது ஏற்படுகிறது.தமிழக தாய் வீடு, இலங்கை எங்களது மகள் வீடு போன்றது.இலங்கை மாணவர்க்ளு இலவச கல்வி அளிப்பது மிகப்பெரிய வர பிரசாதமாக அமைந்துள்ளது.
மறக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம்.ஆகவே கல்வி உயிரிக்கு சமான ஒன்று . கல்வியை நம்மிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.
உயிரை இழந்து, சொந்தத்தை இழந்து, உடமையை இழந்து, சொந்த இடத்தை இழந்து, தாய் நாட்டை இழந்து நாங்கள் இடம் பெயர்ந்து வந்தாலும் எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது கல்வி தான். அந்த வகையில் எங்கள் மக்களுக்கு இந்த கல்வியை இலவசமாக வழங்குவதை மனமார பாராட்டுகின்றேன்.
No comments