கள்ளச்சாரயத்தால் உயிரிழக்கவில்லை..... தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

 

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசார் அல்லது மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் குடி பழக்கமே இல்லாத ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதனால் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments