• Breaking News

    திருச்சி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதியுடன் அதிநவீன ஏசி தங்குமிடம்


    திருச்சி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதியுடன் அதிநவீன ஏசி தங்குமிடம்.10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்படும் இந்த வசதிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இதுகுறித்து ஒப்பந்ததாரா் கூறுகையில், ஒரு மணி நேரத்துக்கு ரூ. 30 கொடுத்து நவீன ஏசி தங்குமிடத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். உறங்கும் அறைக்கு (ஸ்லீப்பிங் பாட்ஸ்) முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 99, 

    2 மணி நேரத்துக்கு ரூ. 170,

    3 மணி நேரத்துக்கு ரூ. 210,

    6 மணி நேரத்துக்கு ரூ. 360,

    12 மணி நேரத்துக்கு ரூ. 499 வசூலிக்கப்படும்.

    குடும்ப அறையில் ஓய்வெடுக்க 6 மணி நேரத்துக்கு ரூ. 699,

    12 மணி நேரத்துக்கு ரூ.999 ஆகும்.

    நவீன ஏசி தங்குமிடத்தைப் பயன்படுத்துவோா் ஆடைகள் உள்ளிட்ட பைகளை வைக்கும் அறையை 6 மணி நேரத்துக்கு முறையே சிறிய, நடுத்தர மற்றும் பெரிய பொருள்களுக்கு ரூ. 10, ரூ. 20, ரூ. 30 கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 24 மணி நேரமும் சுத்தமான குளியலறை, கழிப்பறை வசதிகள் உள்ளன என்றாா்.

    டிஜிட்டல் லாக்கரை, ஓடிபி வழியே கைப்பேசி எண் சரிபாா்ப்பின் மூலம்தான் திறக்க முடியும். டிஜிட்டல் முறையில் மட்டுமே பயணிகள் லாக்கருக்கான வாடகையைச் செலுத்த முடியும்.

    மிகவும் நம்பகமான, பாதுகாப்பான சேவையை இந்த டிஜிட்டல் லாக்கா் வழங்குகிறது என இதைப் பராமரிக்கும் ரயில்வே ஒப்பந்ததாரா் தெரிவித்தாா்.

    No comments