திருவாரூர்: தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


   திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாலஸ்தீன கடைசி எல்லை ரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமையில் முத்துப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் 8.6.2024 அன்று  சனி மாலை சுமார் 5 மணிக்கு நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன்,   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் சபீர் அலி கண்டன உரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்   மாநில பேச்சாளர்   அப்துர் ரஹ்மான்,  மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான்,  மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன்,   முகமது வாசீம் ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

இறுதியாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றியுரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட ஜமாஅத் கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments