தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லி ராணி (32) என்பவரை அவருடைய கணவர் மேகநாதன் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும் டில்லி ராணி பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவரை வழிமறைத்த கணவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கடந்த ஆறு மாத காலமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் தப்பி ஓடிய மேகநாதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
0 Comments