• Breaking News

    கோட்டூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் ஒன்பதாம் ஆண்டு பால்காவடி உற்சவ திருவிழா


    மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா,கோட்டூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மகா மாரியம்மன் திருக்கோயில் ஒன்பதாம் ஆண்டு பால்காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக தாமரைக்குளத்துக்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க முன்னே செல்ல பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். 

    பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்மன்களுக்கு பாலாபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    No comments