இன்ஸ்டாகிராம் காதல்.... சிறுமி இளைஞருடன் ஓட்டம்....

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த தோழிகளான 17 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெணாகிய இருவரும் சேர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும்போது இரண்டு வாலிபர்களுடன் தனித்தனியாக பழக்கம். அதில் 17 வயது சிறுமி கேரள மாநிலத்தை சேர்ந்த செல்வா என்ற இளைஞரையும், 19 வயது சிறுமி சேலம் குப்பனூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் மூர்த்தி என்பவரையும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு தோழிகளும் கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் கோவையில் காதலர்களுடன் இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போதும் இளம்பெண்ணும் பெற்றோருடன் செல்ல மறுத்ததுடன் காதலர்களுடன் செல்ல விரும்பியதாக கூறினார். 19 வயது இளம் பெண் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அவருடைய குடும்பத்தினருடன் சென்று விட்டார். ஆனால் 17 வயது சிறுமி மைனர் என்பதால் பெற்றோருடன் தான் செல்ல வேண்டும் என்று போலீசார் எவ்வளவு எடுத்துக் கூறியும் அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments