விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே கலாம் நகர் பகுதியில் ஆனந்த் என்பவரது வீடு உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. அப்போது, அப்பகுதியில் வலுவின்றி, காற்றில் ஆடிக் கொண்டிருந்த செல்போன் டவர், ஆனந்த் வீட்டின் மீது சரிந்து விழுந்தது.இதில் வீட்டின் தண்ணீர் தொட்டி, மதில் சுவர் ஆகியவை உடைந்து சேதமடைந்தது.
எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து வீட்டின் உரிமையாளர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செல்போன் டவர் சொந்தமான நிறுவனத்தின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செல்போன் டவர் சரிந்து விழுந்து இரண்டு நாள்கள் ஆகியும் தற்போது வரை அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் புகார் அளித்த வீட்டின் உரிமையாளர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில நாள்களாக திடீரென கன மழை, பலத்த சூறாவளி காற்று வீசுவதால், இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments