சிவகங்கையில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரனின்0 ஆண்டுகால பொது வாழ்வு சேவையை பாராட்டி மாட்டு வண்டி எல்லை, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுப் பிரிவில் எட்டு ஜோடி மாடுகளும் சின்னமாற்று பிரிவில் 17 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டு பிரிவிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 மைல் தூரமும், பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது.
சிவகங்கை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் ஒன்றை ஒன்று போட்டியிட்டு முந்தி சென்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியினை சிவகங்கை, முத்துபட்டி, மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 Comments