நாசா நடத்திய விண்வெளி சார்ந்த அறிவியல் மாநாட்டில் சைதன்யா பள்ளி சார்பில் 639 மாணவர்கள் பங்கேற்பு

 

அமெரிக்காவின் நாசா நடத்திய விண்வெளி சார்ந்த அறிவியல் மாநாட்டில் சைதன்யா பள்ளி சார்பில்  639 மாணவர்கள் பங்கேற்றனர். 

அதில் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் சிறந்த   செயல்திட்டங்களுக்கு எடுத்துரைத்து பல்வேறு பரிசுகளை வென்றனர்.

அதன்படி  முதல் பரிசு 7 மாணவர்களும், இரண்டாவது பரிசு 11  மாணவர்களும், மூன்றாவது பரிசு 15 மாணவர்கள் என  62 செயல் திட்டங்களுகான பரிசுகளை  வெற்றி பெற்று பதினொன்றாவது ஆண்டாக உலகளாவிய அளவில் சைதன்யா பள்ளி குழும மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர்.

அமெரிக்காவின் நாசா நடத்திய விண்வெளி சார்ந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று சைதன்யா பள்ளியில் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களை சைதன்யா பள்ளி இயக்குனர் திருமதி சீமா, பள்ளி தலைமை செயலர்  திரு.ஹரி பாபு, தலைமை மேலாளர்கள்  பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள்  ஆகியோர் மாணவர்களுக்கு     பூங்கொத்து கொடுத்தும், சான்றிதழ்கள் வழங்கியும் தங்களது பாராட்டுகளையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments