புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தேர் சாய்ந்து ஒருவர் பலி..... 4 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா (இன்று) திங்கள் கிழமை மாலை நடைபெற இருந்த நிலையில் தேரின் மேலே கும்பம் ஏற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கயிறு அறுந்து தேர் சாய்த்து விழுந்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(60) என்பவர் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த 4 பேர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments