• Breaking News

    புதுக்கோட்டை: கட்டுமாவடியில் 4-வது நாளாக கனமழை.... மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


     புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் 4 நாட்களாக பெய்த கனமழையால் மழை நீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. கடலோரப் பகுதியான கட்டுமாவடியில் தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்தது. இதனால் தாழ்வான  பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கட்டுமாவடி புதுமனை தெருவில் வடிநீர் வாய்க்கால்களை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாலும், மழைநீர் செல்ல வழி இல்லாததாலும் கழிவு நீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

     இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை சீரமைத்து, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments