சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.... 3 பேர் பலி

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை முன்னேற்பாடுகளில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 அறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளே சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments