விஜய்-யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்து அசத்தினர்
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாள் மற்றும் கட்சி தொடங்கப்பட்ட முதல் பிறந்தநாள் என்பதால் த.வெ.க தொண்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்க்ளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடாமல் பல்வேறு சேவைகளை செய்து பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தாம்பரத்தில் த.வெ.க.வை சேர்ந்த் கணவன் மனைவி உட்பட 3 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து செய்துள்ளனர்.
தங்களது மறைவுக்கு பின்னர் தங்களது அனைத்து உடல் உறுப்புகளும் தானமாக எடுத்துக் கொண்டு பிறருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தாம்பரம் மருத்துவமனையில் பதிவு செய்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னாக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மற்றும் குன்றத்தூர் த.வெ.க. நிர்வாகி எஸ் கே எஸ் நெப்போலியன் ஆகியோர் உடலுறுப்புகளை தானம் செய்தது அனவரையும் நெகிழ்ச்சியில் அழுத்தியது.
No comments