• Breaking News

    சென்னை மாநகராட்சி வார்டு எண்ணிக்கை 300 ஆக உயர வாய்ப்பு..... அமைச்சர் கே.என் நேரு.....


     தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் கே.என் நேரு சென்னையில் மாநகராட்சி வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சென்னையில் ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இதனால் வார்டு எண்ணிக்கைகளை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் மானிய கோரிக்கை விவாதத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கே.என் நேரு இவ்வாறாக பதில் வழங்கியுள்ளார்.

    No comments