• Breaking News

    மதுரை: பாஜகவினர் பாடை கட்டிப் போராட்டம்..... 300 பேர் கைது

     

    தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்ததில் 55 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் பாஜக கட்சி என்று திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அந்த வகையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    அப்போது காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் இறந்தவர்களை பாடையில் கொண்டு செல்வது போன்று பாடையை பூக்களால் அலங்கரித்து பாஜகவினர் சிலர் எடுத்து வந்தனர். அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாக தடையை மீறி போராட்டம் நடத்திய 300 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments