• Breaking News

    தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 200 மடங்கு அதிகமான வாக்குகளை பாஜக கூட்டணிக்கு மக்கள் தந்துள்ளனர்...... பாஜக மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம்


    தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பாஜக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. பாஜக மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் எஸ்.கதிரவன் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் ஆனந்தகுமார், தாம்பரம் மேற்கு தலைவர் எஸ்.ராஜா அவர்கள் முன்னிலையில்  பாஜகவினர் தாம்பரம் காந்தி சாலை சந்திப்பில்  வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறுகையில்:

    சுதந்திர இந்தியாவில் நெருக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை பெறுவதற்காக கடுமையான முயற்சியில் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.2001 முதல் தோல்வியை சந்திக்காத பொது வாழ்க்கையில் மக்கள் நம்பிக்கையை பெற்ற தலைவராக நரேந்திர மோடி அரியணையில் ஏற இருக்கிறார் அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் புது டெல்லியில் கூடி தங்களுடைய விருப்ப கடிதத்தை தந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.ஒரு நல்ல ஆட்சி தருவதற்காக மக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் வருகின்ற 100 நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அளித்துள்ள வாக்குறுதிகள் மக்கள் நல அறிவிப்புகளும் வர இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியும் நரேந்திர மோடி அவர்கள் புதுடில்லியில் அறிவித்துள்ளார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி யாக டி ஆர் பாலு தேர்வு பெற்றமைக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் அதே சமயத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 

     தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 200 மடங்கு கூடுதலாக பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் 28 ஆயிரம் வாக்குகள் மாநகராட்சி தேர்தலில் பெற்ற பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளத்தோடு மக்களை சந்தித்த பிறகு பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் கடும் உழைப்பால் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் சுமார் 75 ஆயிரம் வாக்குகளை பெற்று தாம்பரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத அங்கமாக வந்திருக்கிறது 

    திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாநகராட்சியில் பொறுப்பில் இருக்கின்ற கவுன்சிலர்கள் மீது மண்டல தலைவர்களின் மீது தாம்பரம் பல்லாவரம் எம்எல்ஏக்கள் மீது இந்த அரசின் மீது அதிருப்தி இருப்பதனாலே எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு இவ்வளவு வாக்குகளை அளித்துள்ளார்கள் இனியாவது மத்திய அரசின் திட்ட நிதிகளை பயன்படுத்தி மாநகராட்சி மக்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்று தர வேண்டும் அடிப்படை வசதிகளை பெற்று தர வேண்டும் இல்லையென்றால் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு திட்டங்களை பெற்று தரக்கூடிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.

    No comments