கடலூர் மாவட்டம் லட்சுமணபுரத்தில் சக்திவேல் ஸ்வேதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் ஹிடாச்சி வாகனம் ஓட்டும் சக்திவேல் சின்னசேலம் பகுதியில் உள்ள ஏரியில் மண்ணள்ளும் வேலை செய்து வருகின்றார். அங்கு தன்னுடைய மனைவியுடன் அவர் தங்கியிருக்கும் நிலையில் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று நடந்த சண்டையில் ஸ்வேதாவை அடித்துக்கொண்டு குழிதோண்டி புதைத்துள்ளார். அதன் பிறகு ஸ்வேதாவின் சகோதரருக்கு போன் செய்து நடந்ததை கூறிவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments