• Breaking News

    18-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

     

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வரும் 18-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த வருடமும் நடிகர் விஜய், பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments