திருவள்ளூர்: கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சொந்த செலவில் தொழிலதிபர் டி.ஜே .டி.தினேஷ் பரிசுகளை வழங்கினார்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி ,பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்து 42 அணிகள் பங்கேற்ற மின்னொளி கைப்பந்து போட்டி ஏலியம்பேடு ஊராட்சி கொள்ளனுர் பகுதியில் நடைபெற்றது.
இதில் பெரியாளையம் அணி முதல் பரிசு வென்றது.வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் ரு15000 ரொக்கத்தை தொழிலதிபர் TJD தினேஷ் வழங்கினார். அதைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை பெற்ற கொள்ளனூர் அணிக்கு கோப்பையும் பத்தாயிரம் ரொக்கத்தை ஏலியம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா சிவகுமார் வழங்கினார்.மூன்றாவது இடத்தைப் பிடித்த ரெட்டம்பேடு சேர்ந்த அணிக்கு ரு7000 கோப்பையும் வழங்கப்பட்டது இதில் கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments