பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது வது பிறந்தநாள் கொண்டாட்டம்
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது வது பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழுத் தலைவர் பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் வே.கருணாநிதி அவர்கள் கழக இருவண்ண கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இதில் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாநகர பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments