ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி.... எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைப்பு

 

கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் இருந்துள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரகாஷ் கேட்டபோது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்திருந்ததை அடுத்து 7 பிரிவுகளின் கீழ் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தினர். இதனிடையே முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். 

அவரை பிடிப்பதற்காக சிபிசிஐடி தரப்பில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கோணத்தில் சிபிசிஐடி போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments