• Breaking News

    அறந்தாங்கி: ஹீல்டு (HEALD) டிரஸ்ட் சார்பாக வெப்ப அலை விழிப்புணர் மற்றும் தடுப்பு முகாம் நடைபெற்றது

     

    தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் பகுதியில் உள்ள  ஹீல்டு (HEALD) டிரஸ்ட் சார்பாக  வெப்ப அலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த தடுப்பு முகாமானது  அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார்  தலைமையில்  அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும்  ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங்  முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வெப்ப அலை குறித்த விழிப்புணர்வும் அதை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு தர்பூசணி ஐஸ் மோர் சர்பத் மற்றும் குளிர்பான நுங்குகள் ஹீல்டு (HEALD) டிரஸ்ட் இயக்குனர் திவ்யா ஏற்பாட்டில்  வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க பேரமைப்பு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வரதராஜன், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டய தலைவர் தங்கதுரை, மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் பழனி தேவா மற்றும் அறந்தாங்க திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், பெருங்காடு SS.சிவசுப்ரமணியன், மேல்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா தேவி ரவிச்சந்திரன், மற்றும்  மேலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் N.அயூப்கான், சமூக ஆர்வலர்கள் கிரீன் முகமது, முபாரக் அலி,  வழக்கறிஞர் லோகநாதன் மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் பழனியப்பன் ஊராட்சி மன்ற உறுப்பினர் பார்வதி பாலா,மற்றும் மேல்மங்கலம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார், மற்றும் அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கராஜ், ,தீபன் ராஜ் ,காளிமுத்து மற்றும் நிர்வாகிகள், மற்றும் ஹில்ட் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.



    No comments