• Breaking News

    நாய் வாலை நிமிர்த்த முடியாது..... நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு.....

     

    திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதுக்கு ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் நீ திருந்த மாட்டியா என்று கேட்டிருந்தார்.

    இந்நிலையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று ஒரு பழமொழி உண்டு. ஒவ்வொரு முறையும் இந்த மனிதன் தன்னை இந்த உலகுக்கு கொண்டு வந்த பெண்ணை அவமதிக்கிறான். மேலும் அவருடைய வீட்டில் பெண்களின் அவல நிலைமையை யோசித்துப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    No comments