மானாமதுரை அருகே திருமண விழாவில் மாடுபிடி வீரரான மணமகனுக்கு ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரரான மணமகனுக்கு மணமகள் வீட்டார் ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமர் (எ)விஜயகுமார் மாடுபிடி வீரரான இவர் தனது வீட்டில் 5க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளைவளர்த்து வருகிறார். அதனோடு சேர்த்து ஆட்டுக்கிடாய்கள், நாட்டின நாய்கள், சண்டை சேவல்கள் போன்றவற்றையும் வளர்த்து வருகிற நிலையில் தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, ஆட்டுக்கிடா சண்டை, சேவல் சண்டை போன்ற போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று இவருக்கு திருமணம் நடைபெற்ற போது இதே ஊரைச் சேர்ந்த மணமகள் காவியா வீட்டினர் மணமகனின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்றை பரிசாக வழங்கியதோடு மட்டுமில்லாமல் அதனோடு சண்டைகிடா, நாட்டின நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றையும் வழங்கினர். இதனை திருமணத்திற்கு வந்திருந்த உற்றார்,உறவினர்கள்நண்பர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
No comments